அயலிசை பாடுவோர் |
| | |
| தமிழ்விழை யாரும் தம்வயிற் றுணவே | 100 |
| அமிழ்தெனத் தேடி அலைந்துழல் வாரும், உரிமை வாழ்வினைக் கருதகில் லாரும் அடிமை வாழ்வினி லமைதி கொள்வாரும் தமிழறி வில்லாத் தமிழருந் தாமே | |
| அயன்மொழி யிசையே அரங்கினிற் பாடுவர் | 105 |
| மயலுணர் வுடையீர்! மற்றொன் றறைகுவல் | |
|
தமிழிலா இசையில்லை? |
| | |
| எம்மொழி யாயினும் இசையினி லேற்போர் நம்மொழி ஒதுக்குதல் நன்றுடைச் செயலோ? ஏற்போர் ஏற்க! இசையுணர் பெரியீர்! | |
| காற்கூ றறிவாற் கழறுதல் தவிர்க! | 110 |
| இசைவளந் தமிழில் இலைஎனப் பிதற்றல் வசையுமக் காகும்; வாய்மதம் ஒழிக! முத்தமிழ் என்றொரு முறைவைப் புளதை மெத்தவும் மறந்தீர்! மெய்ம்மையை இகழ்ந்தீர்! | |
| நெஞ்சறி பொய்யை நிகழ்த்துதி ராயின் | 115 |
| பஞ்சென அதுதான் பறப்பதிங் கொருதலை; | |
| | |
இதுவா மொழி வெறி? |
| | |
| பழியுரை நாணாப் பண்புள பெரியீர்! மொழிவெறி எனவொரு மொழியினைமொழிந்தீர் உரிமை விழைவது வெறியெனக் கூறும் | |
| பெருமை நும்பால் உறைவது கண்டேன்; | 120 |
| நரிமனம் இஃதென நவின்றிட நாணுவல்; வெறியுணர் வுளதேல் விளைவன வேறு! முறையொடும் அறிவொடும் முறையிடு கின்றோம்; நெறியறிந் தொழுகும் நேர்மையை வியந்திலீர்! | |
| புரைபடும் நும்முளம் புலப்படச் செய்தீர்! | 125 |
--------------------------------------------------------------- |
| காற்கூறு - கால்பங்கு, வாய்மதம் - வாய்ச்செருக்கு. | |
| | |