| பல்பொரு ளுணர்ந்த பண்டகர், அருள்நெறி | |
| மல்கிய துறவற மாண்பினில் உறையுநர், | 25 |
| குறள்நெறி ஓம்பிக் குடியர சோங்க அறநெறி காக்கும் அரசியல் அளிஞர், பிறபிற கட்சிகள் பேணுநற் றலைவர், பல்வகைச் சமயப் பாங்கினில் ஓங்கிய | |
| நல்வகைப் பொருளுணர் நற்றமிழ் வல்லவர், | 30 |
| இசையின் அரசர், ஏழிசை வல்லவர், நசைமிகு திரைப்பட நடிகர், பல்வகை ஏடுகள் நடாத்தும் இயல்பினர் யாரும் கூடினர் தத்தம் கோட்பா டனைத்தும் | |
| நாடும் வகையால் நன்கனம் விளக்கினர்; | 35 |
| அவரவர் கோட்பா டறைந்தன ராயினும் தவறியும் தமிழின் தன்மை குறைத்திலர்; வழியும் முறையும் வகைபல வாயினும் மொழியின் உயர்வே முன்னினர் அவர்தாம்; | |
|
நான்கு முடிபுகள் |
| | |
| கவரும் முறையால் கனிமொழி காக்க | 40 |
| அவரவர் நோக்கில் அறைந்தவை யாவும் உவகையிற் கேட்ட உயர்பே ரடிகள் தொகுத்தவை கூட்டி வகுத்தனர் நால்வகை; `இருப்பவை யனைத்தும் உருச்சிதை யாமற் | |
| கருத்துடன் பேணிக் காத்திடல் வேண்டும்; | 45 |
| இருப்பது போதும் எனநினை யாமல் புதுப்புது நூல்கள் படைத்திடல் வேண்டும்; அயன்மொழி புகுத்திவண் அல்லல் கொடாஅவகை மயலர வொழிந்து மதியினைத் துலக்கித் | |
| தடுத்துக் காக்கும் தறுகண் வேண்டும்; | 50 |
| பொற்புடை நுதலால், புருவச் சிலையால், உட்குறிப் புணர்த்தும் மெய்ப்பா டனைத்தும் தெற்றென விளக்கித் தெரிவையர் ஆடுங் கலையெழிற் றிறமெலாம் பலபடப் புகழ்ந்தனர்; | |
--------------------------------------------------------------- |
| பண்டகர் - டாக்டர் பட்டம் பெற்றவர், நடாத்தும் - நடத்தும், கோட்பாடு - கொள்கை, மயலரவு - மயக்கம், தறுகண் - துணிவு. | |
| | |