| தொடுக்கும் தமிழ்க்குத் துறைதொறும் ஆட்சி கொடுத்திடல் வேண்டுமென் றடிகள் கூறினர்; | |
|
பூங்கொடியின் மகிழ்ச்சி |
| | |
| பூங்கொடி யாகிய பொற்றொடி நங்கை ஆங்கண் எழுந்தனள் அவள்சில மொழிந்தனள்; | |
| `சமயம் கட்சி சாதியோ டரசியல் | 55 |
| அமையுந் தொழிலால் ஆர்த்தெழு பகைமை இமயம் போலது எதிருள தாயினும் கருதா ததனைக் கடிதினில் ஒதுக்கி ஒருதாய் மக்கள் உணர்வே ஓங்கி | |
| வருகை புரிந்தீர் வாழிய பெரியீர்! | 60 |
| நெடுநாட் கனவை நினைவெனச் செய்தீர்! பிறப்பால் வழக்கால் பேசும் மொழியால் இனத்தால் தமிழர் எனுமொரு நினைவே கருத்தாற் கொண்டுளோம் காலம் நமதே! | |
| தாய்மொழி காக்கும் தணியா வேட்கை | 65 |
| சேய்கள் நம்பாற் செம்மையிற் கிளர்ந்தது; வாகையும் சூடுவோம் வளர்தமிழ் பாடுவோம் ஓகையில் ஆடுவோம் ஓங்குக ஓங்கவே!' | |
|
இனி ஆற்றவேண்டிய பணி |
| | |
| `நாடொறும் நாடொறும் நாடெலாம் போந்து | |
| பாடியும் பேசியும் பட்டி மன்றத்துச் | 70 |
| சொல்லமர் ஆடியும் சொல்வன சொல்லி நல்லதோர் ஆர்வம் நாட்டிடை மூட்டவும் மொழியுணர் வூட்டவும் முயன்றனம்; பொங்கிப் பொழியும் ஆர்வமும் புத்துணர் வெழுச்சியும் | |
| பெருக்கெடுத் தோடும் பெற்றிமை கண்டோம்; | 75 |
| உருக்கொள அதுதான் ஒருநெறிச் செல்லத் | |
--------------------------------------------------------------- |
| ஓகை - உவகை, நாடொறும் - நாள்தோறும். | |
| | |