| திருப்பலும் வரன்முறைப் படுத்தலும் நங்கடன் ஆக்கப் பணியில் அதனைத் தேக்கி ஊக்கப் படுத்துதல் ஒன்றே இனிமேல் | |
| ஆற்றப் படும்பணி யாகும் ஆதலின் | 80 |
|
செயற்குழு அமைக்கவேண்டுதல், பன்மொழிப் பயிற்சிக்குழு |
| | |
| செயற்குழு பலவகை சீர்பெற அமைத்துச் செயற்பட வேண்டுவல்; செந்தமிழ் நூல்களை அயன்மொழி பலவுளும் அமைத்திடல் வேண்டியும் நயனுள மொழிகளுள் நல்லன காண்புழிப் | |
| பயனுறப் பெயர்த்துப் பைந்தமிழ் ஆக்கவும் | 85 |
| உலக மொழிகள் பலவும் பயில இலகும் அறிவினர் இணைந்ததோர் குழுவும், | |
|
இலக்கியம் பரப்புக் குழு |
| | |
| தொல்காப் பியமும் தூயநற் குறளும் பல்கிய பொருள்செறி பாட்டுந் தொகையும் நாலடி முதலா நயனுரை நூலும் | |
| தோலெனும் வகைப்படும் தொடர்நிலைச் செய்யுளும் | 90 |
| கல்லா மாந்தர்தம் கருத்துட் பாய்ச்ச வல்லார் சொல்லில் நல்லார் குழுவும், | |
|
புதுநூல் படைப்புக் குழு |
| | |
| முன்னோர் நெறியின்முரண்பா டின்றிப் | |
| பன்னூல் ஆக்க உன்னுவோர் தாமும் | 95 |
| பின்னோர் நம்மைப் பேணும் வகையால் நன்னூல் ஆக்க நயப்போர் தாமும் | |
--------------------------------------------------------------- |
| நங்கடன் - நம்கடமை, பாட்டு - பத்துப்பாட்டு, தொகை - எட்டுத்தொகை நூல். | |
| | |