பக்கம் எண் :

அறப்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 227

  பொருளால் நடையால் புதுப்புது முறையால்
உரையால் கவியால் வரைவோர் தாமும்
 
  அறிவியல் நூல்கள் ஆய்வுரை நூல்கள் 100
  செறிவொடு பிறபிற செய்வோர் தாமும்
நிறைபுல மாந்தர் நெருங்கிய குழுவும்,
 
 

வழூஉக் களைவோர் குழு

     
  ஆவணத் தெருவினில் அரசியல் துறைகளில்
கோவிலில் செய்திகள் கொடுத்திடும் இதழ்களில்
 
  மேவிய திரைப்பட மாகிய உலகில் 105
  எழுத்தில் பேச்சில் எவ்வெத் துறையிலும்
வழுக்கள் களைந்து வண்டமிழ் வளர்ப்போர்
தொகுப்பாய் பணிசெயும் தொண்டர்தம் குழுவும்,
 
 

அறப்போர் ஆற்றுங் குழு

     
  புதியதோர் மன்பதை பூத்திட வேண்டி  
  அறிவியல் பயிற்றிடும் அரும்பெறற் பள்ளியில் 110
  புரிவியல் மொழியால் போற்றுநம் மொழியால்
புகட்டிட வேண்டிப் போரிடுங் குழுவும்,
தாய்த்திரு நாட்டில் தண்டமிழ்க் கெதிராய்
ஏய்ப்பவர் புகுத்திடும் எம்மொழி யாயினும்
 
  மேய்ப்பவர் மருளக் காழ்ப்பகை சிதற 115
  அறப்போர் தொடுக்கும் ஆண்மையர் தமிழ்மொழி
புரப்போர் பலராய்ப் போரிடுங் குழுவும்
அமைத்திடல் வேண்டும்; இறப்போர்க் குழுவுள்
உயிரும் உடலும் உவப்புடன் ஈவோர்
 
  அயர்வும் தளர்வும் அச்சமும் விடுத்தோர் 120
  இடம்பெறல் வேண்டும்; இவ்வணம் அமைத்துக்
கடமை வுணர்வும் கட்டுப் பாடும்
உடையராய்ப் பணிசெயின் உலகின் நம்மொழி
 

---------------------------------------------------------------

  புரிவியல் - புரிகின்ற