| ஒருமொழி யாக ஓங்குதல் ஒருதலை' | |
| என்றுரை யாற்ற, ஈண்டிய பெரியோர் நன்றுநன் றென்றே நயந்தனர் ஆர்த்தனர்; | 125 |
|
அடிகளார் போர்முழக்கம் |
| | |
| மன்றினில் இருந்த மலையுறை யடிகள் ஒன்றிய உணர்ச்சியும் உள்ளத் தெழுச்சியும் துன்றிய மனத்தராய் நன்றுணர் புலவோர் | |
| குழுவுடன் ஆய்ந்து வழிமுறை தெரிந்து | 130 |
| குழுபல அமைத்துக் கூறினர் சிலசொல் `தென்மொழி நிலைமை தெற்றென விளக்கி மன்பதைக் குரைத்தோம்; மன்பதை சார்பில் எவ்வெவ் வகையால் இயம்புத லொல்லுமோ | |
| அவ்வவ் வகையால் ஆள்வோர்க் கியம்பியும் | 135 |
| தாய்மொழிக் குரிமை தந்திலர் அதனால் ஆய்ந்தபின் அறப்போர் ஆற்றத் துணிந்தனம்; போரிட முனைந்து புகுவோர் கேண்மின்! ஆருயிர் கொடுப்ப தறப்போ ராகும் | |
| வேறுயிர் எடுப்பது மறப்போ ராகும்; | 140 |
| அதனதன் பெற்றிமை அறிகதில் லம்ம! முதற்போர் புரிய முனைந்தனம் இன்றே; போரெனில் உயிர்பல போதலும் இயல்பே; சீரிய இப்பெரும் போரினில் புகுவோர் | |
| யாரென யாரென இயம்புதிர் இன்றே; | 145 |
| இருப்பதும் ஓருயிர் இறப்பதும் ஓர்முறை தடுத்திட ஒல்லுமோ? சாவதும் ஒருதலை; விடுக்குமவ் வோருயிர் வீணிற் செலவிடா தடுத்தநம் தாய்மொழி அரியணை வீற்றிடத் | |
| தொடுத்திடும் போரில் விடுத்திடத் துணிக! | 150 |
| துணிவோ ரெவரோ அவரே வருக! துணிவில ராயின் தொலைவிற் செல்க! | |
--------------------------------------------------------------- |
| நங்கடன் - நம்கடமை, பாட்டு - பத்துப்பாட்டு, தொகை - எட்டுத்தொகை நூல். | |
| | |