நாட்டவர்க்கு வேண்டுகோள் |
| | |
| செல்வோர் தாமும் செய்வதொன் றுளது வெல்போர் கருதி விடுதலைப் படையினர் | |
| சிறையகம் புகுந்தும் உறுதுயர் அடைந்தும் | 155 |
| கையுங் காலும் மெய்யும் சிதைந்தும் நையும் உயிரொடு நடைப்பிண மாகியும் ஆளுநர் செயலால் அல்லற் பட்டுழிக் கோளும் குறையும் கூறித் திரியாது | |
| கண்ணீர் ஒருதுளி காட்டுக; இலையெனில் | 160 |
| உண்ணிறை பரிவொடும் ஒருமொழி புகல்க! அந்நிலை தானும் ஆற்றீ ராயின் செல்லல் எமக்குச் செய்யா தமைக! அல்லன கூறுதல் அறவே விடுக!' | |
| என்பன கூறி யிருந்தனர் ஆங்கண்; | 165 |
| | |
| போர்க்கொடி உயர்த்தல் | |
| | |
| புலிநிகர் வீரர் பொற்றொடி மகளிர் கலைமலி தமிழைக் கற்றறி புலவர் எவ்வகைத் துயரும் ஏற்றிடும் திறலோர் அவ்வயின் யாம்யாம் ஆருயிர் ஈகுதும் | |
| என்றுரைத் தெழுந்தனர் எடுத்தனர் வஞ்சினம் | 170 |
| துன்றிய ஆர்ப்பொலி துளைத்தது விண்ணை; செங்கண் மறவர் சீற்றமும் ஏற்றமும் பொங்குதல் கண்டுளம் பூரித் தெழுந்து பற்பல அணிகள் பகுத்தனர் அடிகள் | |
| பொற்புடன் போற்றினர் போர்க்கொடி ஏற்றினர்; | 175 |
| | |
| எங்கணும் மறியல் | |
| | |
| அருண்மொழி ஒருபால் அடிகள் ஒருபால் விரிமலர்ப் பூங்கொடி வேறொரு பாலும் | |
--------------------------------------------------------------- |
| கோள் - புறங்கூறல், அவ்வயின் - அவ்விடம். | |
| | |