பக்கம் எண் :

பக்கம் :230பூங்கொடி

  உரிமை விழையுநர் ஒவ்வொரு பாலும்
அணியணி யாக ஆங்காங் கணுகிப்
 
  பணிவும் கனிவும் துணிவும் பூண்டு 180
  அரசியல் அலுவல் ஆற்றும் மனைதொறும்
பரசுங் கோவில் பள்ளிகள் தோறும்
பாடம் பயிற்றும் பள்ளிகள் தோறும்
பாடும் அரங்கம் பயிலிடந் தோறும்
 
  மறியல் செய்தனர்; மருண்டனர் ஆள்வோர்; 185
  வெறியோடு காவல் வீரரை ஏவினர்;  
     
 

அனைவரும் சிறைப்படுதல்

 
     
  ஏவிய சாவலர் எத்துணை வெருட்டியும்
சாவது துணிந்தவர் சற்றும் விலகிலர்;
அடித்தும் பிடித்தும் அச்சப் படுத்தியும்
 
  பிடித்த கொள்கையிற் பிறழ்ந்திலர் மறவர்; 190
  வீரர் சீறினர் விலங்கொடு வந்தனர்
போரறம் புரிந்திடும் பூங்கொடி முதலா
நேரறம் பூண்டிடும் நீள்புகழ் அடிகளும்
கட்டில் அடங்காக் காளையர் கூட்டமும்
 
  மட்டு வார்குழல் மங்கையர் ஈட்டமும் 195
  நிறைகுண மங்கையர் அருண்மொழி அன்னையும்
சிறையகம் புகுதச் செந்தமிழ் காக்க
விலங்குடைக் கையராய் வீதிகள் பலவும்
 
  கலங்கலில் மனத்தராய்க் கடந்தனர் நடந்தே. 199

---------------------------------------------------------------

  பரசும் - வணங்கும், ஈட்டம் - கூட்டம்.