பக்கம் எண் :

பக்கம் : 231

30. சிறையகம் புகுந்த காதை

ஊரவர் உரையாடல்

 

 

தாய்கை விலங்கைத் தறிப்பான் வேண்டித்
தங்கை விலங்கைத் தாங்கினர் செல்வோர்
அஞ்சில ராகி அகமுகம் மலர்ந்து
நெஞ்சுரம் ஏறி நிமிர்ந்தநன் னடையராய்ப்
 
  போதல் கண்ட பொன்னகர் மாந்தர் 5
  வீதியின் மருங்கில் வெற்றிப் பேரொலி
ஆர்த்தனர் ஒருசிலர்; அவர்புகழ் கண்டுளம்
 
 
 

அறப்போர் நாடகம்

 
     
  வேர்த்தவர் சிலர் `இது வீண்படு முயற்சி
இவரால் தமிழ்மொழி ஏற்றம் உறுமோ?
 
  எவரால் தமிழுக் கிடுக்கண் நேர்ந்தது? 10
  தவறே எண்ணித் தம்பெயர் ஒளிர
அறப்போர் நாடகம் ஆடினர்' என்றெலாம்
பரப்பினர் பழிமொழி பண்பிலாத் தொழிலினர்;
 

வென்றிப் போர்

 
  நெடும்புகழ்த் தமிழ்மொழி நீணிலத் தோங்கக்  
  கடமுணர் இவரே காத்திட வல்லார்! 15
  அடவோ இவர்தம் அரும்பெரும் முயற்சி
கெடுமோ? இங்குக் கிளைபோற் புகுமொழி
தடுத்து நிறுத்தத் தக்கார் யாருளர்?
அடுத்த துயரெலாம் அகமகிழ் வுடனே
 
  மடுத்துத் தந்நலம் விடுத்தனர் ஆஆ! 20
  தொடுக்குமிவ் வறப்போர் கொடுக்கும் வென்றியே'
என்றநல் லுரைகளும் இடையிடை மிடைந்தன;
 

---------------------------------------------------------------

  தங்கை - தம்கை; ஒளிர - விளங்க, கடம் - கடமை, வென்றி - வெற்றி, மிடைந்தன - கலந்தன.