மகளிர்க் கடுக்குமோ |
| | |
| `மகளிர்க் கித்துணை மனச்செருக் காகுமோ? தகவுடைத் தொழிலோ! தன்றுணை, மக்கள், | |
| இல்லறம், குடும்பம் என்றுளங் கொளாஅது | 25 |
| மெல்லிய மாதர் மீப்படு செயலிற் செல்லுதல் அறமோ? சீச்சீ இழிவாம்; தெருவிடை இவ்வணம் தெரிவையர் விலங்குடன் வருவது நாணுத் தருவ'தென் றரிவையர் | |
| அறிவுரை போற்சில அறைந்தனர் ஆங்கண்; | 30 |
|
மகளிர் வீரம் |
| | |
| `ஆடவர் போல அரிவையர் தாமும் நாடும் மொழியும் நமதென எண்ணிப் பாடு படுமிவர் பண்பினைப் போற்றுதும்; விஞ்சுந் துயரினை வீறுட னேற்கும் | |
| வஞ்சியர் நெஞ்சம் வாழ்த்துதும் வாழ்த்துதும்; | 35 |
| நெடும்பகை தமிழுக்கு நேர்ந்ததே என்று குடும்பப் பணியாக் குறித்தறப் போரிற் பங்கு கொண்டதோர் பாங்கினை ஏத்துதும்; மங்கையர் இவரென மதித்தலு மின்றிச் | |
| செங்கை பிணித்துத் தெருவிடை யிழுத்துச் | 40 |
| செல்லுமோ ரரசும் செங்கோ லரசோ? நல்லார் எவரும் நாணுந் தாகைத்' தெனப் பல்லார் குழுமிப் பாவையர் கூறினர்; | |
|
பித்தர் செயல் |
| | |
| கற்றவர் சிலர்தாம் மற்றவர்க் கண்டு | |
| `வெற்றொலி என்படும்? விளைபயன் ஒன்றிலை; | 45 |
| பற்றுளம் உடையரேல் பைந்தமிழ் கசடறக் கற்றுளந் தெளிக! மற்றவர் தமக்கும் ஐயந் திரிபற அதனை விளக்குக! | |
--------------------------------------------------------------- |
| தன்றுணை - கணவன், நாணுத்தருவது - நாணம்தருவது. | |
| | |