பக்கம் எண் :

சிறையகம் புகுந்த காதைபக்கம் : 233

  செய்யுந் தொழிலிது செந்தமிழ்க் காக்கம்;  
  நையும் வகையால் நலிவுகள் எய்திக் 50
  கையில் விலங்குடன் கடுஞ்சிறை புகலால்
வையம் புகழும், வாழ்வுகள் நலியும்;
முத்தமிழ் வளர்க்க முயல்வான் வேண்டிப்
பித்தர் செயலினைப் பேணுதல் முறையோ?
 
  எத்துணைப் பயன்தரும் இச்செயல்' என்றனர்; 55
 

உரிமைப் போர்

     
  `கசடறக் கற்றனர் கற்றவை உரைத்தனர்
நசையினை ஊட்டினர் நற்றமிழ் வளர்த்தனர்;
ஆயினும் உரிமையும் அதற்குரிய நிலையும்
ஏயும்நன் மதிப்பும் ஈண்டதற் கிலையே!
 
  உரிமையும் நிலையும் ஒடுங்கி வருங்காற் 60
  பெருமையும் பிறவும் பேசிப் பயனென்?
அரசியல் நெறியால் அயன்மொழி புகுமேல்
வருமொழி ஒன்றே வளம்பெறும் செழிப்புறும்;
செந்தமிழ் ஆட்சி சிறப்புறல் யாங்ஙனம்?
 
  இந்த நிலையினை எண்ணியோர் இவர்தாம் 65
  எத்தகு துயரும் ஏற்போ ராகி
முத்தமிழ் வளர்க்க முனைந்தனர்; தமிழின்
பித்தராய்ப் பத்தராய்ப் பேணினர் அறப்போர்
இத்தகு நெறியும் இன்றுள நிலையில்
 
  வேண்டுவ தொன்றே விளைபயன் உறுதி; 70
  வரும்நம் பரம்பரை வாழ்வினை வேண்டிப்
பொருமிவர் முயற்சியைப் போற்றுதல் வேண்டும்'என்
றாயும் அறிவினர் அறைந்தனர் புகழ்ந்தனர்;
 
 

சோற்றுக் கவலை

     
  அறநெறி பிறழா அறப்போர் வீரரை  
  அரசியல் வாதிகள் அறைந்தனர் சிலசொல் 75

---------------------------------------------------------------

  முயல்வான் - முயல.