பக்கம் எண் :

பக்கம் :234பூங்கொடி

  `உடனிலை ஓம்பவும் உயிர்நிலை பெறவும்
உடனடித் தேவை உணவே யன்றோ?
சோற்றுச் சிக்கல் மாற்றும் வழியைச்
சாற்றுவ தன்றி மாற்று நெறியில்
 
  மக்களைத் திருப்புதல் மடமை யாகும்; 80
 

ஆட்சியில் ஆசை

     
  சிக்கலை வளர்க்கும் நற்கலை வல்லார்
மொழியைக் காக்க முற்படு வார்போல்
வழிவகை செய்துதம் வாழ்வைப் பெருக்கினர்;
ஆட்சியில் இவர்க்கோர் ஆசை தோன்றலால்
 
  மாட்சிமை யில்லாச் சூழ்ச்சிகள் செய்தனர்; 85
  நாட்டை யாளும் நற்றிறன் தெரியார்
கேட்டினிற் செலுத்துவர் கீழ்நிலைக் காக்குவர்;
நாட்டவர் இவரை நம்புதல் ஒழிக'
என்றெலாம் பழித்தும் இழித்தும் உரைத்தனர்;
 
 

சோறும் மொழியும்

     
  `உயிர்நிலை பெறவும் உடலினை ஓம்பவும் 90
  வயிறு நிறைக்கும் வாயுணா வேண்டும்;
வேண்டுவ தில்லென விளம்பினர் எவரோ?
மூண்டெழு விலங்கு முதலா வுள்ளவும்
என்பு மில்லாப் புன்புழு முதலவும்
 
  அன்புடன் முயல்வ தவ்வுணாப் பெறவே; 95
  புழுவும் விலங்கும் மொழியறி வில்லன;
தொழுதகு பிறப்பெனத் தூயவர் ஓதிய
விழுமிய மாந்தர் மொழியறி யுடையரால்
விலங்கினும் புழுவினும் வேற்றுமை தெரிய
 
  நலங்கிளர் மொழியினை நயந்தனர் ஓம்பிட; 100
  ஓம்பும் முயற்சியில் உறுதுயர் அடைந்து
தேம்பும் வாழ்வில் சிதைந்தவர் பலர்பலர்;
 

---------------------------------------------------------------

  உணா - உணவு,