பக்கம் எண் :

சிறையகம் புகுந்த காதைபக்கம் : 235

குடியரசு கொடுத்த உரிமை

     
  ஆட்சியில் ஆசை அரும்புதல் தீதோ?
மாட்சிமை யின்றெனின் மற்றவர் அங்கே
 
  பற்றுதல் விடாஅது சுற்றுதல் ஏனோ? 105
  பாரா ளுரிமை பரம்பரைச் சொத்தோ?
யாரா கினுமவ் வாட்சியில் அமரக்
குடியர சாட்சி கொடுத்துள துரிமை;
ஆளும் நற்றிறம் அமைந்தவர் இவரென
 
  வேளை வருங்கால் விளங்குத லுறுதி; 110
 

அறப்போர் வெல்லும்

     
  இன்றிவர் அறப்போர் இயற்றிய ததற்கோ?
நன்றறி மாந்தர் நவிலார் அங்ஙனம்;
பொய்ம்மை எத்தனை புகலினும் நிலைக்குமோ?
மெய்ம்மை எத்துணை மறைக்கினும் அழியுமோ?
 
  அறப்போர் வெல்லும் அன்னை மொழியை 115
  மறப்போர் ஆட்சி மண்ணினுட் செல்லும்
எனச்சில தலைவரும் இயம்பினர் ஆங்கண்;
 
     
 

சிறையகம் புகுந்தனர்

 
     
  மனத்தொடு பட்டது மறைத்த லின்றி
அனைத்தும் வெளிப்பட அறைந்தன ராகி
 
  ஒட்டியும் வெட்டியும் உரைபல நிகழ்த்திப் 120
  பட்டி மன்றெனப் பலர்பலர் நிற்க,
அறப்போர் நிகழ்த்திய அரிவையர் தாமும்,
குறட்பே றுடையார் குன்றுறை யடிகளும்,
இறப்பே எனினும் ஏற்போர் என்ற
 
  வரிப்போத் தனையரும் வாழ்த்தொலி யுடனே 125
  சிறைக்கோட் டத்துட் சென்றனர் சிரித்தே. 126

---------------------------------------------------------------

  விட அது - விடாமல், வரிப்போத்து - புலி.