பக்கம் எண் :

பக்கம் :236

31. விடுதலைக் காதை

 

சிறையும் விடுதலை வீரரும்

     
  கருங்கற் சுவரும் இரும்பின் கம்பியும்
திருந்திய நெஞ்சகம் பொருந்திய உணர்ச்சியைப்
பிரித்திட வல்ல பெற்றிமை யுற்றவோ?
குறித்தநற் கொள்கையர் கொடுஞ்சிறைக் கொட்டிலுட்
 
  கிடப்பினும் நாடும் கிளர்ந்தெழும் அவரும் 5
  தனித்தனி பிரிந்திடத் தகுவரோ? விடுதலை
வேட்டெழும் வீரர்தம் ஏட்டினில் அந்நிலை
காட்டுதல் கூடுமோ? கேட்டதும் இல்லை;
பூங்கொடி யுளத்துப் பூத்துநல் லார்வம்
 
  யாங்ஙனம் அகலும்? ஓங்கி வளர்ந்தது, 10
 

பூங்கொடி புலம்பல்

     
  இனிமை மிகுதமிழ் இயம்பும் வாயினள்
தனிமை தருதுயர் தாங்கி யிருப்பவள்,
நனிமிகும் உணர்வொடு நவின்றனள் இவையிவை,
`முன்னர் ஒருநாள் மூடிய சிறையுள்
 
  தன்னந் தனியாய் இன்னலிற் கிடந்தேன் 15
  செய்யாப் பழியைச் செய்தேன் என்று
பொய்யாற் சிறையுட் புகுத்தினர் கவன்றேன்;
இன்றென் தாய்மொழி இடுக்கண் துடைத்திடும்
நன்றமர் நடாத்தி நானிலம் அறியச்
 
  சென்று புகுந்தேன் சிறையகம் அதனால் 20
  ஒன்றும் மகிழ்வால் உளங்களிக் கின்றேன்;  
     
 

உரிமை பெறுமுன் இறவேன்

 
     
  நன்று புரிவோர் நலிவுறல் இயல்போ?
தூய்தமிழ் வாழத் தொண்டுகள் புரிந்தேன்,
தாய்மொழி வளரத் தந்தேன் வாழ்வு,
 

---------------------------------------------------------------

  ஒன்றும் - பொருந்தும்.