பக்கம் எண் :

விடுதலைக் காதைபக்கம் : 237

  நல்லற மென்ற இல்லறந் துறந்து 25
  சொல்லறம் பூண்டு சுற்றினேன் யாண்டும்,
கல்லெறி பட்டுக் காயம் உற்றேன்,
இடுபழி யேற்றேன் இருஞ்சிறைப் பட்டேன்,
கெடுவழி செல்லாது நடுநிலை பிறழாது
 
  அடுபகை நீக்க அறப்போர் தொடுத்தேன், 30
  உயிரும் ஈய உறுதி பூண்டுளேன்,
இயலிசை கூத்தெனும் என்தமிழ் உரிமை
எய்துமுன் இறக்க ஏலேன் தாயே!
 
 

எதை நான் எண்ணுவேன்

     
  செய்தஎன் பணியெலாம் சீர்பெறுங் கொல்லோ?  
  வைதலும் வாழ்த்தலும் வழங்கியோர் தாய்மொழி 35
  தழைத்திடச் சேர்ந்துடன் உழைத்திடு வார்கொலோ?
தனிப்பகை நீங்கி ஒருப்படு வார்கொலோ?
நற்றமிழ் ஈங்குக் கொற்றம் புரியக்
கற்றவர் மற்றவர் கலந்தழைப் பார்கொலோ?
 
  பகுத்துணர் வூட்டிப் பைந்தமிழ் கூட்டி 40
  அகத்துள் ஏற்றிய அணையா விளக்கம்
நின்றொளி வீசி நிமிர்ந்தெழுங் கொல்லோ?
இன்றுள நிலையில் எவரைநான் எண்ணுவேன்?
 
     
 

ஒவ்வொரு வகையினர்

 
     
  ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு வகையினர்  
  ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நிலையின; 45
  ஒவ்வொரு நிலையும் உன்னுதல் தன்னலம்;
தன்னலம் தவிர்ந்து தமிழ்நலங் கருதித்
தண்டமிழ்க் குரிமை தந்தனர் என்னும்
ஒளிதெரி யாமுனம் உயிர்பிறி தாக
 
  வழிவரு மோவென அழிதுய ருற்றேன்; 50

---------------------------------------------------------------

  கொற்றம் - அரசு.