1. விழாவயர் காதை |
தமிழகச் சிறப்பு |
|
| அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம் | |
| மேவலர் அணுகா வீரங் கெழுமிய | 5 |
| காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு; | |
| `யாதும் ஊரே யாவரும் கேளிர்'என் | 10 |
| றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை தருவது தொழிலாத் தான்கொண் டதுவே; | |
| | |
| பொங்கல் வந்தது | |
| | |
| அயலவர் மொழிக்கெலாம் ஆளுகை தருதல் | |
| தவறென உணரார் தாய்மொழி ஈங்குச் | 15 |
| சிறுகச் சிறுகச் சீரிழந் தேகுதல் அறியக் காணார் அயர்ந்தனர்; அந்நாள் பொங்கல் நாளெனும் மங்கலத் திருநாள் எங்கணும் மகிழ்ச்சி இலங்கிட வந்தது; | |
| | |
| அறிக்கை விடுதல் | |
| | |
| கட்சி சமயங் கருதிடா நல்லோர் | 20 |
--------------------------------------------------------------- |
| உடீஇய - உடுத்த, மேவலர் - பகைவர், கெழுமிய - பொருந்திய, கோலோச்சியது - செங்கோல் செலுத்தியது, நிறீஇ - நிறுவி, கேளிர் - உறவினர், ஆளுகை - ஆட்சி, இலங்கிட - விளங்கிட. | |
| | |