பக்கம் எண் :

பக்கம் :24பூங்கொடி

  நச்சி ஒருசிலர் நாட்டு மக்கட்கு
ஆய்ந்து வரைந்ததோர் அறிக்கை அனுப்பினர்;
 
     
 

விழாக் கொண்டாடுக

 
     
  `தமிழர் திருநாள் தைமுதல் நாளாம்
அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்
 
  உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் 25
  சளைப்பிலா முயற்சி தருபயன் பெற்றுப்
புதுமை இன்பம் பூணும் நன்னாள்
இதுவே பெருவிழா எனக்கொண் டாடுக;
ஆங்காங் குறையுநர் அயலவர் பண்புகள்
 
  நீங்கிய திருநாள் நினைந்திதைப் பேணுக; 30
  பிறபிற பண்புகள் பேணிய போதும்
நமக்கென மொழியும் நாளும் உளவென
உலகம் அறிய உணர்த்துவம் வாரீர்;
 
     
 

நகரை அணிசெய்க

 
     
  பலவகைத் தோரணம் பாங்குடன் நாற்றுமின்  
  வளர்குலைக் கமுகும் வாழையுங் கட்டுமின் 35
  கிளரொளி மாடங் கிளைபடு குடிசை
யாங்கணும் யாங்கணும் ஓங்குக இன்பம்;
 
     
 

ஒற்றுமை பரப்புக

 
     
  எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை
தத்தங் கொள்கை தவிர்த்து நாடும்
 
  மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே 40
  வழியெனக் கருதி வழங்குக பேருரை;
முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும்
சிறுசிறு பகையைச் சிந்தைவிட் டகற்றுக
ஓரினம் நாமென உன்னுக பெரிதே;
 

---------------------------------------------------------------

  நாற்றுமின் - தொங்கவிடுவீர். யாண்டும் - எங்கும், உன்னுக - நினைக.