பக்கம் எண் :

விழாவயர் காதைபக்கம் : 25

 

வாழிய வாழிய

 
     
  காரினம் மழையைக் கரவா தருள்க; 45
  பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி
வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல்;
செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக
வாழிய பொங்கள் வாழிய திருநாள்'
 
  என்னுமிவ் வறிக்கை எங்கணும் பறந்தது; 50
     
 

பொங்கற் கொண்டாட்டம்

 
     
  பொழிபனி கழியப் பொங்கலும் வந்தது;
எழில்பெறச் செய்தனர் இல்லந் தோறும்
வெண்ணிறச் சுண்ணம் விளைத்தது தூய்மை;
கண்கவர் முறையிற் கட்டினர் தோரணம்;
 
  வண்ணப் புத்துடை வகைவகை பூண்டு 55
  கன்னல் துண்டினைக் கடித்திடும் சிறுமகார்
தெருவினில் ஓடித் திரிந்தனர் யாண்டும்;
கருவிழி மகளிர் கடும்புனல் ஆடித்
தறிதரும் ஆடை தரித்தனர் ஆகி
 
  நெய்வழி பொங்கல் செய்ம்முறை செய்து 60
  கைவணம் காட்டிக் காதலர் மகிழப்
|படைத்தனர் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்தனர்;
கடைத்தெரு வெங்கணும் களிகொள் ஆட்டம்;
 
     
 

ஏறு தழுவினர்

 
     
  கவைபடு கூரிய காளையின் கொம்பிடைத்  
  துவைபடத் தழுவிச் சுற்றிய துணிமணி 65
  அவிழ்த்தன ராகி ஆர்த்தனர் காளையர்;
அன்பிற் குரிய ஆடவர் காளையை
 

---------------------------------------------------------------

  கார் - மேகம், கன்னல் - கரும்பு, சிறுமகார் - சிறுவர்கள், கவைபடு - வளைந்த, துவைபட - அழுத்தமுற.