| அஞ்சில ராகி நெஞ்சுரங் காட்டிக் குழுவினர் நடுங்கத் தழுவுதல் கண்டு | |
| வஞ்சியர் களித்தனர் வாழ்த்தொலி கூவினர்; | 70 |
| | |
| கலை நிகழ்ச்சி | |
| | |
| அறிஞர் ஒருபால் ஆய்வுரை நிகழ்த்தினர், கலைபயில் கூத்தினைக் கண்கவர் அரங்கில் இலைநிகர் எனுமா றேற்றினர் கலைஞர்; இசையொடு கடலொலி பிறக்கிட எழுந்தது, | |
| வசையெனப் பிறமொழிப் பாடல்கள் வழங்கிலர் | 75 |
| தமிழே இனிமைத் தமிழே இசைத்தனர், மணிநகர் எங்கணும் மாபெருந் திருநாள் | |
| அணிபெறத் திகழ்ந்தது ஆர்ப்பொலி யுடனே. | 78 |
| | |