4. படிப்பகம் புக்க காதை |
இயற்கைக் காட்சிகள் |
|
| நங்கையும் தோழியும் நளிமலர்ச் சோலையுள் தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்; | |
| | |
| தாமரைக் காட்சி | |
| | |
| `செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள் | |
| அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல் அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்! | 5 |
| ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல் | 10 |
| வாடிக் கவிழ்ந்த மலர்களும் காணுதி! | |
| | |
கொடிமலர்க் காட்சி |
| | |
| செடிகள் மரங்கள் சிரித்து மலர்ந்திடக் கொடிகள் நோக்கிக் கூடிக் குலாவத் தாவிப் படர்ந்து தாமும் நகைத்தன, | |
| வண்ணப் பூக்கள் வகைவகை மலர்ந்து கண்ணைப் பறிக்கும் காட்சியைப் பாராய்! | 15 |
| | |
| வண்டுக் காட்சி | |
| | |
| புதிதா வருவோன் பொருந்திய நண்பன் வதியிடன் அறிய வாயில் தோறும் | |
--------------------------------------------------------------- |
| நளி - குளிர்ந்த, புகுதா - புகாத, ஒண்டொடி - ஒளிபொருந்திய வளையலணிந்த பெண், வதியிடன் - தங்குமிடம். | |
| | |