| புகுந்து வினவிப் போதல் போலத் | |
| தகுந்த மலர்தொறும் தண்மது வுண்ணக் குடைந்து குடைந்து கொட்புறும் வண்டினை நடந்து மெலிந்த நங்காய் நோக்குதி! தென்புறந் தருமொரு தென்றல் மலர்தொறும் அன்புடன் தழுவி அசைந்து மெல்லென | 20 |
| நம்முடல் வருடி நலந்தரல் நுகர்வாய்! | 25 |
| | |
| புற்றரைக் காட்சி | |
| | |
| பைம்புற் பரப்புப் பசும்படாம் விரித்தெனத் தோன்றும், இடையிடைத் துளிர்விடு செடிகள் ஈன்ற மலர்வகை எழில்பெற வரைந்த சித்திர வகையை ஒத்திடல் காணாய்! | |
| | |
| பொய்கைக் காட்சி | |
| | |
| இந்நாள் விடுமுறை எனுஞ்சொற் செவியுறத் துள்ளிக் குதிக்கும் பள்ளிச் சிறாரென வெள்ளைக் கயல்கள் விடுபுனற் பொய்கையில் தாவிக் குதிக்கும், தவஞ்செய் கொக்கு மேவிப் பற்ற முயன்றும் மீன்பெறாது | 30 |
| ஏங்கிநின் றிரங்குதல் காண்'என அல்லி பூங்கா எழிலும் பொய்கையும் காட்டப் பூங்கொடி அவ்வெழிற் பூவனம் காண்புழி, | 35 |
| | |
கோமகன் முகுந்தனை வினவல் |
| | |
| அவ்வூ ராங்கண்அரிதின் முயன்றுறு பெருநிதிக் கிழவன் பெட்புறு மைந்தன் | |
| கோமகன் என்பான் கோடுயர் மாட | 40 |
--------------------------------------------------------------- |
| கொட்புறும் - சுழலும், படாம் - துணி, சிறார் - சிறுவர்கள், பெட்பு - விருப்பு. | |
| | |