பக்கம் எண் :

படிப்பகம் புக்க காதைபக்கம் : 39

  மாமறு கோரம் வருவோன் எதிரில்
வாடிய முகத்தன் வருதுயர் மனத்தை
மூடிட முகுந்தன் முன்வரு வோனை
`வீதியில் என்னெதிர் வருந்தினை வருவோய்!
 
  ஏதம் உற்றது யாதென் றுரை'என, 45
     
 

முகுந்தன் துயரம்

 
     
  `மாதர் பூங்கொடி மலர்வனம் புகுவோள்
வழிஎதிர்ப் படலும் வடிவேல் உற்ற
வெந்துயர் நெஞ்சில் வேலெனத் தைக்க
நொந்துழல் மனத்தேன் நும்வரல் அறியேன்
 
  சிந்தனை நினைவொடு செல்லுதல் உற்றேன்
யானுறும் இடும்பை இஃதே' என்றனன்;
50
     
 

கோமகன் ஆவல்

 
     
  மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல்
தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்;
`ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத்
 
  தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன்
ஆவேன் யான்'என ஆவல் துரப்பக்
காவிற் புகுந்துள பாவையைக் காண்பான்
வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்;
55
     

பூங்கொடி வெருவுதல்

     
  புகுவோன் றன்னைப் பூங்கொடிநோக்கி  
  `இகுளை! இம்மகன் என்மேற் காதல்
மிகுமனத் தானென மேலொரு நாளில்
தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்
யானிவண் செய்வது யாது'என நடுங்கினள்;
60

---------------------------------------------------------------

  தையல் - பெண் (பூங்கொடி), கா - சோலை, இகுளை - தோழி! அனை - அன்னை, இவண் - இங்கு.