| படிப்பகம் புகுதல் | |
| | |
| அல்லி வெருவி ஆங்குள படிப்பகம் | |
| அதனுட் புகுகென அரிவையைக் கடத்தித் தான்வெளிப் புறத்தே தனிமையில் நின்றனள்; | 65 |
| | |
| கோமகன் காமவுரை | |
| | |
| காமம் என்னும் கடுவிட நாகம் செக்கர் மாலைத் தென்றலின் இசையால் பக்கம் நின்று படம்விரித் தாடித் | |
| தீண்டஅப் பெருமகன் சிறுகுணம் மேவி நீண்ட உயிர்ப்பொடும் நெருங்கி வருவோன் கனிமொழி அல்லியைக் கண்களில் நோக்கித் `தனிவெளி நின்றாய்! தந்திரம் அறிவேன்; நனிஎழில் நங்கைஎன் காதல் நலத்தை | 70 |
| உணரும் ஆற்றல் உற்றனள் கொல்லோ? புணர்மணம் கொள்ளாள் பொதுநலம் பேணி இளமை கழித்திடல் ஏனோ? வாழ்வெனும் குளம்பெறு மலராம் கூடிய இளமை; மலர்மணம் வீச மனங்கரு தாமல் | 75 |
| அலரின் கொடியை அறுத்திடல் நன்றோ? இன்பத் துறவு துன்ப விடுதலை ஈயுந் திறத்ததோ? இதழ்கள் எத்துணை ஆயிரம் இருப்பினும் தோயுறும் மதுவைக் காத்திட வல்லதோ பூத்தநற் றாமரை? | 80 |
| ஆர்த்திடும் சுரும்பினம் அருந்துதல் உறுதி; பொறிகளின் கதவைப் பூட்டி வைப்பின் நெறிதடு மாறி நெஞ்சங் கலங்கும்; | 85 |
--------------------------------------------------------------- |
| வெருவி - அஞ்சி, அரிவை - பெண் (பூங்கொடி), செக்கர் -சிவந்த, உயிர்ப்பு - மூச்சு, பொறிகள் - மெய் முதலிய ஐம்பொறிகள். | |
| | |