| கொழுநன் ஆவேன் | |
| | |
| கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன் | |
| எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்; நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்; | 90 |
| | |
| உடன்படச் செய்க | |
| | |
| குறளகம் விடுத்துக் குமரன் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் | |
| அளப்பருஞ் செல்வம் அனைத்தும் ஈவேன்; களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன் காதற் கடலைக் கடந்திட அவளை மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்; வேலெனும் விழியாய்! வேண்டினென் நின்னை | 95 |
| மதியுடம் படச்செய்!' எனும்அம் மாற்றம் செவியுற நெஞ்சம் செயலறக் கலங்கி நவையறச் சிலசொல் நவின்றனள் அல்லி; | 100 |
| | |
| அல்லியின் அறிவுரை | |
| | |
| `செல்வக் கோவே! சீர்சால் கல்வி மல்குறு நினக்கு மங்கையர் அறிவுரை | |
| குறிப்பது நன்றன் றாயினும் குறிப்பேன்; விருப்பிலா மகளிரை விழைவது முறையோ? கருத்தொரு மித்தால் காதல் சிறக்கும்; ஒருபால் அன்பால் உறுபயன் ஒன்றிலை; | 105 |
--------------------------------------------------------------- |
| பொறேன் - பொறுக்கமாட்டேன், பெட்டனள் - விரும்பினள், நவை - குற்றம், மல்குறு - நிறையும், விழைவது - விரும்புவது. | |
| | |