பக்கம் எண் :

பக்கம் :42பூங்கொடி

  சிறுவர் கூடிச் சிற்றில் இழைத்து  
  மறுகணம் சிதைத்து மகிழ்வுறல் போலத்
திருமணம் செய்து திரிவது பேதமை;
அறிவுடை மாந்தர் அதனை ஒவ்வார்;
நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச்
செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால்
110
  வெல்லக் கருதின் விளைவது வேறு;
சொல்லக் கூசேன் மெல்லியல் மாதரார்
பிள்ளைப் பூச்சிகள் அல்லல் பெரியோய்!
காமங் கதுவைக் கருத்தினை விடுப்பின்
நாமங் கேடுறும் நல்லறந் தீயும்
115
  தீமை பற்பல சேர்வது திண்ணம்;
மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து
காதல் மேற்கொளல் கடமை யாகும்;
120
     
 

காமங் கடந்தவள்

 
     
  காமம் என்னும் கள்வன் றனக்கே
புகஇடம் கொடாஅள் பூட்டி, நிறைஎனும்
 
  காப்பமைத் திருத்தலின் கற்பெனும் மாமணி
காத்திடல் வல்லாள், கருத்தினில் வைப்பாய்!
என்னுயிர்ப் பாங்கி இல்லற வாழ்வினை
உன்னுதல் துறந்தே ஓங்குயர் பொதுப்பணி
ஒன்றே உயிர்ப்பென உவப்புடன் பூண்டனள்
125
  இன்றே அவள்பால் எழுமனம் விடுக!'
என்றவள் உரைத்த இவ்வுரை அவன்மனம்
பொருந்தா முன்னர்ப் பூங்கொடி உருவம்
130
  விருந்தா கியதே கோமகன் விழிக்கே. 133

---------------------------------------------------------------

  ஒவ்வார் - கருதார், கதுவ - பற்ற, நாமம் - பெயர், கொடாஅள் - கொடுக்கமாட்டாள்.