பக்கம் எண் :

பக்கம் : 43

 

5. தாமரைக்கண்ணி தோன்றிய காதை

 
 

கோமகன் கலக்கம்

 
  கோமகன் விழியிற் குலமகள் படுதலும்
காமங் கதுவிய கருத்தின னாகிப்
படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ!
சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப்
 
  புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ!
புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும்
உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி
அரவம் சிறிதும் அறியா இடமாம்;
அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல
5
  நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்;
கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்;
உள்ளிற் செல்லுதல் ஒவ்வா தன்றோ!
சீரியோர் பலரும் சீறுவர் இகழ்வர்
வேறிடங் கூடுவென்' எனமனம் வெதும்பி
10
     
 

கோமகன் அல்லியை வினவல்

 
     
  அகல்வோன் அல்லி அணிமுகம் நோக்கி
`நகைமுக நங்காய்!என் நலிவினைக் காணுதி!
இளையள் என்னை ஏற்றருள் வாள்கொலோ?
உளையும் எனக்குயிர் உவந்தளிப் பாள்கொலோ?
எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரை'எனச்
15
  சித்தங் கலங்கிச் செப்புவள் அல்லி, 20
     
 

அல்லியின் மறுமொழி

 
     
  'எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும!
வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ?
 

---------------------------------------------------------------

  புல் - ஒலிக்குறிப்பு, அரவம் - ஒலி, குழுமும் - கூடும், உளையும் - வருத்தும்.