| தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட விழைதல் உண்டோ? விடுவிடு காமம்! | |
| மழைமுகில் தொடுதர வானுயர் கோவில் அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப் புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர் நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்; வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள் | 25 |
| வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின் விஞ்சுங் காமம் விடுவிடு' என்றனள்; | 30 |
| | |
| அல்லியின் வரலாறு வினவல் | |
| | |
| `புயலைத் தடுக்கஓர் பொறியும் உளதோ? மயலை விடுக்க மதியுரை புகன்றனை! கயல்விழி! நன்'றெனக் காமுகன் நகைத்து, | |
| `மடம்படு மாதே! மற்றொன்று வினவுவல் வடபுலந் திருப்போன் வளநிதி மிக்கோன் வெருகன் எனும்பெயர் மருவிய ஒருவன் பெறுமனை நீயெனப் பேசிடும் இவ்வூர் அவனை நீங்கி ஆயிழை யிவளொடு | 35 |
| சிவணிய தென்னை? செப்புக' எனலும், | 40 |
| | |
| அல்லியின் வரலாறு | |
| | |
| `வளர்பெரு நிதியோய்! வாழ்கநீ பெரும! தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ நல்வழிப் படர்க! நானிவண் உற்றது செல்வக் கோவே செப்புவென் கேண்மோ! | |
| மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துத் தகப்பன் தடையைப் பொருட்படுத் தேனாய் | 45 |
--------------------------------------------------------------- |
| தத்தி - கிளி, வஞ்சி - பெண் (பூங்கொடி), பொறி - கருவி, மயல் - மயக்கம், ஆயிழை - ஆய்ந்தெடுத்த அணிகலனுடைய பெண் (பூங்கொடி), சிவணியது - பொருந்தியது, ஒரீஇ - நீங்கி. | |
| | |