பக்கம் எண் :

தாமரைக்கண்ணி தோன்றிய காதைபக்கம் : 45

  வருமெனை மறித்து வஞ்சகஞ் செய்தனன்;
வெருகன் தன்னுரை முழுதும் மெய்யென
நம்பிய என்பால் நலம்நுகர்ந் ததற்பின்
 
  வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக்
காணா தேகினன்; கலங்கஞர் எய்தி
நாணி என்னூர் நண்ணே னாக,
50
     
 

அல்லி தந்தையின் அன்பு

 
     
  அழலோம் பாளன் அறநெறிச் செல்வன்
பழமறை வல்லான் பார்ப்பன முதுமகன்
 
  தாயிலாக் குறையைத் தவிர்க்குந் தந்தை
என்னைக் காணான் இரங்கிப் புலம்பித்
தென்றிசைக் கடல்வரை தேடித் திரும்பி
வருவோன் இங்கே உறுமெனைக் கண்`டிவண்
எங்ஙனம் வந்தனை என்மகள்?' என்றே
55
  பொங்கிய கண்ணீர் என்றலைப் பொழிந்து,
பிழைமணம் பட்டுப் பெருநெறி பிழைத்து
வழுவினேன் ஆயினும் வளர்மகப் பற்று
நிறைந்தவன் ஆதலின் நீங்கி நடவான்
புரந்திட எண்ணிப் பூசுரர் மனைதொறும்
60
  இரந்துண வெடுத்தும் என்னைப் பேணினன்; 65
     
 

வைதிகக் கொடுமை

 
     
  ஆறாக் கவலை அரித்திட வருநோய்
தீராத் துயரால் திரிவோன் ஒருநாள்
அந்த ணாளர் மனைதனை அணுகிச்
செந்தண்மை வேண்டிச் செயலிலான் நிற்கஅச்
 
  சேரி வாழுநர் சீறி `வைதிகம் 70

---------------------------------------------------------------

  கலங்கஞர் - மிகுந்ததுன்பம், நண்ணேன் - பொருந்தேன், அழலோம்பாளன் - வேள்விசெய்வோன், பிழைமணம் - பிழைபட்ட திருமணம், புரந்திட - காத்திட, பூசுரர் - பார்ப்பனர், செந்தண்மை - கருணை.