| புத்தொளி வீச நத்தின ராகி அரிவையர் மன்றம் அமைத்தவர், செல்வ! | 95 |
| | |
| குறளகத்தின் பணிகள் | |
| | |
| தம்பெரும் உழைப்புத் தருமுயர் நிதியும் தம்பினும் அன்பால் தருபெரும் பொருளும் குவித்துக் கண்டதே குறளகம்; அதுதான் | |
| தவிப்போர்க் கருளும், சாதியால் தாழ்நிலை வகித்துளோர் தமக்கு வாழ்வினை நல்கும், அகத்தும் புறத்தும் அன்பே நிறையும், கசடறக் கற்றோர் கண்டநல் உண்மைகள் திசைஎலாம் பரவத் தெளிதமிழ் நூல்கள் | 100 |
| பற்பல ஆக்கிப் படைக்கும், அதாஅன்று தமிழ்மொழி ஒன்றேஇத் தரணி ஆள அல்லும் பகலும் அரும்பணி ஆற்றும்; | 105 |
| | |
| அடிகள் அடைக்கலம் அருளல் | |
| | |
| நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர் | |
| துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக் களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத் தொண்டுகள் புரியும் தோகை இவளிடம் | 110 |
| விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்' என; | 115 |
| | |
| கோமகன் அகலுதல் | |
| | |
| `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால் அடைவென்' எனவுரைத் தகன்றனன் கோமகன்; | |
--------------------------------------------------------------- |
| நத்தினர் - விரும்பினர், தம்பினும் - தம்தம்பி, வகித்துளோர் - அடைந்துள்ளவர், கசடு - குற்றம், அதாஅன்று - அதுமட்டுமன்றி, தோகை - மயில் போன்ற பூங்கொடி, நண்பு - நட்பு. | |
| | |