பக்கம் எண் :

பக்கம் :48பூங்கொடி

 

பூங்கொடியின் கடுமொழி

 
     
  படிப்பகம் விடுத்துப் பாவை போந்து  
  `தடித்திடும் உளத்தன், தகவிலா நெறியன்,
காவா நாவினன், காமுகன், நல்லன
மேவா வாழ்வினன், மெல்லியல் தம்பால்
நிறையெனும் காவல் நிலைப்பதை அறியான்,
குறைமதி யாளன், கொடியன் ஒழிந்தனன்;
120
  இத்தகு காமம் இல்லா தொழிக!
இத்தகும் ஆடவன் இருந்திடப் பெறுமேல்
பொல்லா நாடெனப் புகலுவர் மேலோர்
நல்லாய் உணர்'எனப் பூங்கொடி நவில்வுழித்
125
     
 

தாமரைக்கண்ணி வருகை

 
     
  தாமரைக் கண்ணி தண்மலர்க் காவுள்  
  வருவோள் `தமிழ்மொழி வாழ்க! வாழ்க!
வருவோர் எவர்க்கும் வணங்காத் தமிழே!
உலக மொழியுள் உயர்ந்தாய் என்கோ!
அலகிலாக் காலங் கண்டாய் என்கோ!
சங்கம் வளர்த்தாய் சான்றோர் பலரால்
130
  பொங்கும் புகழ்நூல் பூண்டாய் என்கோ!
ஆயிரம் பகைதாம் ஆர்ப்பரித் துறினும்
தூவென இகழ்ந்து தோள்வலி காட்டி
எழிலர சோச்சும் தமிழே என்கோ!
கடல்பொங் கலையில் கறையான் வாயில
135
  சுடர்எரி நாவில் சுழிபடும் ஆற்றில்
தப்பிப் பிழைத்த தமிழே என்கோ!
140
     
  கோமகன் அகலுதல்  
     
  `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன்
மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால்
அடைவென்' எனவுரைத் தகன்றனன் கோமகன்;
 

---------------------------------------------------------------

  காவா - காவாத, மேவா - பொருந்தாத, மெல்லியல் - பெண்கள், நிறை - கற்பு, நவில்வுழி - சொல்லுமிடத்து, என்கோ - என் பேனா?, தூ - இகழ்ச்சிக்குறிப்பு, எரிநா - தீச்சுடர்.