| உன்னுயர் பெருமை உரைத்திட ஒருநா தன்னால் இயலேன்' எனஅத் தையல் | |
| | |
| அந்தி வந்தது | |
| | |
| பாடின ளாகப் பையென மாலை | |
| கூடிவந் துற்றது; கூடடை பறவை, மணியொலி கேளா மாணவச் சிறுவர் அணியணி யாக ஆர்ப்பது போலப் பலபட இரைந்தன பசுமரந் தோறும்; குலவிய தம்பணி ஆற்றிய கொழுநர் | 145 |
| அயர்வொடு வருவரென் றதனை ஆற்றிட நகைமுக மாதரார் வழிவழி நோக்கினர்; நாடொறும் பயிலும் நங்கையர் பாட்டொலி மாட மிசைதொறும் மலர்ந்து பரந்தன; கால்விரல் சதிசொலக் கைவிரல் மொழிசொல | 150 |
| நூலிடை நுடங்க நுதல்வியர் வரும்ப நீள்சடைப் பின்னல் நெளிந்துபின் துவளப் பாவையர் ஆடல் பயிலும் அரங்கில் மேவிய ஒலியும் மிடைந்து பரந்தன; முழவொலி யாழொலி முடுகி எழுந்தன; | 155 |
| குழலியர் முன்றில் கோலஞ் செய்தனர்; ஆவலொடு திரும்பும் ஆவினங் கண்டு தாவின கன்றுகள்; தளிர்விரல் மாதரார் வீடுகள் தோறும் விளக்கெடுத் தனரால்; ஆடிடுஞ் சிறுவர் ஆசாற் காண்டலும் | 160 |
| பாடொலி அடங்கிப் பதுங்குதல் என்ன வகைவகைப் புள்ளினம் வாயொலி ஒடுங்கிப் | 165 |
| புகுந்திட அந்திப் பொழுதுவந் ததுவே. | 167 |
| | |
| அடிகள் அடைக்கலம் அருளல் | |
| | |
| நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர் | |
| துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக் களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத் தொண்டுகள் புரியும் தோகை இவளிடம் | 110 |
| விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்' என; | 115 |
| | |
| கோமகன் அகலுதல் | |
| | |
| `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால் அடைவென்' எனவுரைத் தகன்றனன் கோமகன்; | |
--------------------------------------------------------------- |
| பையென - மெதுவாக, அயர்வு - சோர்வு, பரந்தன - பரவின, துவள - அசைய, மிடைந்து - நெருங்கி, முடுகி - விரைந்து. | |
| | |