| 6. கல்லறை காண் காதை | |
| நிலவும் உடுவும் | |
| | |
| மாலைப் பொழுதில் மேலைத் திசையில் நீலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப் பரிதி சென்றனன்; இரவெனும் | |
| ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட நீல வான நெடுந்திரை தன்னில் கோல வட்டம் குறித்தனன், அதனை ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது; நுதலிற் புரளும் சுருள்குழல் வரைய | 5 |
| நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன்; களங்கப் பட்டது கண்டனன் நெஞ்சம் துளங்கிக் கனன்று தூரிகை வீசி உதறினன்; கிண்ணம் ஒன்றனிற் பட்டுச் சிதறிய வெண்ணிற வண்ணம் சிரித்திட | 10 |
| அதனை உடுவென அறைந்தனர் உலகோர்; வண்ணஅவ் வுடுக்களும் வட்ட நிலவும் கண்ணுங் கருத்தும் களிமிகப் பொழிலகம் வெண்ணிறங் கொள்ள ஒளிக்கதிர் வீசின; | 15 |
| | |
| தாமரைக்கண்ணி வினவல் | |
| | |
| அவ்விடை அவண்வரும் ஆரணங் காகிய | |
| செவ்விய நெஞ்சினள் திருநிறை செல்வி பொதுப்பணி பலநாள் புரிந்து துயர்பல | 20 |
--------------------------------------------------------------- |
| பரிதி - கதிரவன், ஞாலம் - உலகம், குழல் - கூந்தல், நுதலி - கருதி, துளங்கி - கலங்கி, கனன்று - சினந்து, தூரிகை - எழுதுகோல், உடு - விண்மீன், அறைந்தனர் - கூறினர். | |
| | |