பக்கம் எண் :

கல்லறை காண் காதைபக்கம் : 51

  விருப்புடன் ஏற்றவள் விடுதலை வேட்டவள்
தாமரைக் கண்ணி தமிழ்மொழி வாழ்த்திப்
பூமலர் மேனிப் பூங்கொடி தன்னொடு
 
  நின்றிடும் அல்லி நிலாமுகம் நோக்கி,
`நின்றீர் நுமக்கு நேர்ந்தது யாது?'என
நிலாமுக அல்லி நிகழ்ந்தது கூறலும்,
25
     
 

தாமரைக்கண்ணி அறிவிப்பு

 
     
  `கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்ட
காமந் தணிந்து கழித்தனன் அல்லன்;
 
  படிப்பகம் இதனுள் பழுதுகள் புரியின்
அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே
வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கி
இருத்தலுங் கூடும் இதுநீர் ஓர்ந்து
திருத்தகு நல்லீர், தெருவழிச் செல்லேல்
30
  பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு
வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்
சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்
கடுநவை உறாஅது; கலங்கேல், அந்நெறி
தாண்டிச் செல்'கெனத் தாமரைக் கண்ணி
35
  வேண்டி நின்றனள்; விளங்கிழை அல்லி 40
     
 

அல்லி அஞ்சுதல்

 
     
  `பிணஞ்சுடு காட்டில் பேயினங் குழுமி
நிணங்கொளத் திரிதலால் கொடுந்துயர் நேர்ந்திடும்
யாங்ஙனம் செல்லுகேம்? யாருந் துணையிலேம்!
பாங்குற நன்னெறி பகருதி' என்றனள்;
 

---------------------------------------------------------------

  ஒறுப்பர் - தண்டிப்பர், ஓர்ந்து - உணர்ந்து, மருங்கு - பக்கம், கடுநவை - கொடிய தீங்கு, உறாஅது - நிகழாது, நிணம் - கொழுப்பு, பகருதி - சொல்லுவாய்.