| அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின் முத்தக் கூத்தன் கல்லறை முன்போய் | |
| நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப் பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்! நாடும் மொழியும் நலம்பெற வேண்டிக் கூடும் நீவிர் கூத்தன் செயற்றிறம் | 70 |
| பூணுதல் வேண்டும் பூவையீர்! ஆதலிற் காணுதல் வேண்டுமக் கல்லறை' என்றனள்; | 75 |
| | |
| முத்தக் கூத்தன் வரலாறு கூறுதல் | |
| | |
| `நல்வழி புகன்றோய்! நன்றி யுடையேம் கல்லறை புகுந்த காளைதன் திறம்எமக்கு அருளுதல் வேண்டும் ஆயிழை' எனலும், | |
| `பிறைநுதல் நல்லீர்! பெட்புடன் கேண்மின்! | 80 |
| | |
| பிறமொழி புகுதல் | |
| | |
| நம்நாட் டகத்தே நயமிலாப் புன்மொழி திணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி; துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்; தாய்மொழி வளர்ச்சி தளர்ந்தஇந் நாட்டில் | |
| நோய்என மடமை நுழைந்து பரந்தது; எழுத்தும் அறியார் படிப்பும் உணரார் கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றோ? என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்; | 85 |
| | |
| நெஞ்சங் கனன்றது | |
| | |
| கன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர் | |
--------------------------------------------------------------- |
| குருதி - இரத்தம், பிறக்கிட - புறமுதுகிட, பூவையீர் - பெண்களே, காளை - முத்தக்கூத்தன், ஆயிழை - தாமரைக்கண்ணி, கேண்மின் - கேளுங்கள், துணுக்குற்று - அச்சமுற்று. | |
| | |