| பொறுக்கும் அளவே பொறுப்பர்; மீறின் ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும் நினைவர்; இதுதான் நெடுநாள் இயல்பு; கனலும் புனலும் கரைமிகின் தடுக்க உலகில் ஒருபொருள் உளதென அறியோம்; | 90 |
| | |
| மான வுணர்ச்சி | |
| | |
| மூக்கினை வருடின் மூங்கையும் சினப்பான்; காக்கும் உயிரினும் மேம்படு கனிமொழி தாய்மொழி யதனைத் தகவிலார் குழுமி ஆய்வஞ் சனையால் அழிக்க முனையின் ஊமையிற் கீழாய் உறங்கிக் கிடப்பரோ? | 95 |
| | |
| அறப்போர் | |
| | |
| போர்ப்படை திரண்டது போர்ப்பறை ஆர்த்தது; கோற்படை வீரரைக் குவித்தனர் அரசினர்; அஞ்சிலர் நெஞ்சில் ஆண்மை ஏறினார் வஞ்சினம் சாற்றினர் வாகை சூடவே; மானம்மீக் கூர்ந்தவர் மறியல் செய்தனர்; | 100 |
| கூனல் நெஞ்சினர் கொடுங்கோல் செலுத்தினர்; அடித்தனர் துரத்தினர், அடவி நாப்பண் துடித்திடக் கொண்டுபோய் விடுத்தனர்; புலிவாய் தப்பிப் பிழைத்துத் தாய்மார் பல்லோர் அப்பணி மீண்டும் ஆற்றினர்; அவர்தமைக் | 105 |
| கொடுஞ்சிறைக் கூட்டுள் கொடுங்கோல் அடைத்தது; | 110 |
| | |
| குருதி சிந்தினர் | |
| | |
| தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக் | |
--------------------------------------------------------------- |
| கனல் - தீ, புனல் - நீர், கரைமிகின் - எல்லை கடந்தால், மூங்கை - ஊமை, கோற்படை - ஊர்காவலர், மீக்கூர்ந்தவர் - மேம்பட்டவர், கூனல் - குறுகிய, அடவி - காடு, நாப்பண் - நடுவில். | |
| | |