| கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர் கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்; தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர் | |
| சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி; குருதி கண்டும் உறுதி குலைந்திலர் முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள் உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும் பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே! | 115 |
| | |
| சிறையும் சிந்தையும் | |
| | |
| கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர் சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்; சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ? குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்; | 120 |
| சிறையகம் போலச் சிந்தனை வளர்க்கும் உறைவிடம் மற்றொன் றுலகில் உளதோ? எண்ணமும் கருத்தும் எலியோ? பொறியுள் நண்ணிய பின்னர் நசுக்க ஒல்லுமோ? | 125 |
| | |
| உண்ணா நோன்பு | |
| | |
| எண்ண இயலா இளைஞர் தம்முள் | |
| உண்ணா நோன்பினை ஒருவன் மேற்கொள அஞ்சிய அரசினர் அதட்டினர் அவனை; நஞ்சையும் கொள்கைக்கு நயந்துண் டோர்பலர் காட்டிய நெறிகள் கண்டோ னாதலின் ஊட்டிய உணவை உமிழ்ந்தனன் மேலோன்; | 130 |
| உயிர்பெரி தன்றே! உயர்ந்தது கொள்கை! அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்; அடித்தனர் அவனை, அருந்தேன் என்றனன்; | 135 |
--------------------------------------------------------------- |
| செழிப்பான் - செழிக்க, இறும் - அழியும். | |
| | |