பக்கம் எண் :

பக்கம் :56பூங்கொடி

  அடித்தனர் அவனை, அஞ்சேன் என்றனன்;
அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்!
 
     
 

முத்தக் கூத்தன் கொலை

 
     
  அந்தோ அந்தோ! ஆவி துறந்தனன்;
நொந்தஅப் பிணத்தை மூடிய கல்லறை
சுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான்
உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்;
சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின்
140
  முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்'என்
றுரைத்ததற் பின்னர் ஒள்ளிழை மேலும்
145
     
 

பூங்கொடி கடல்நகர் செல்ல இசைதல்

 
     
  `இசைத்துறை வல்லாய்! இரைகடல் நாப்பண்
கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண்
மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்;
 
  அப்பெரும் மடமை அகற்றுதல் வேண்டும்
ஒப்பிலா நீயும் உடன்வர இசைவு
தருதி' என்றனள் தாமரைக் கண்ணி;
உவப்புடன் பூங்கொடி ஒப்புதல் தந்து
சவக்குழிக் கல்லறை சார்வுறும் வழியே
150
  அல்லிபின் தொடர ஏகினள் அவளே. 155

---------------------------------------------------------------

  ஒள்ளிழை - தாமரைக்கண்ணி, இரைகடல் - ஒலிக்கும் கடல்.