| வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாய் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி | |
| ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?' என்றனள்; | 25 |
| | |
| கோமகன் மறுமொழி | |
| | |
| `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே! துணைசெய நினைந்தே தோகை அவட்குத் துணைவன் ஆகத் துணிந்தேன்' எனலும், | |
| | |
| மீண்டும் இடித்துரை | |
| | |
| `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக் | |
| கொல்வது ஒக்கும்நின் கூற்று! நின்னை நயவாப் பெண்டிரை நாடுதல் சிறுமதிச் செயலாய் முடியும், சிந்தித் துணர்மதி! பொருள்வலி ஒன்றால் புந்தியை இகழேல்! அருளும் அன்பும் அமைதியை நாட்டும்! | 30 |
| மற்றோர் தமக்கும் மனமென ஒரு பொருள் உற்றதை உணர்க! நின்மனம் ஒன்றே விழைந்து பெறஎனின் விளையாட் டுப்பொருள் அல்லர் மகளிர்! அறியாய் கொல்லோ?' என்றறி வுறுத்தி ஏகும்அவ் வன்னை, | 35 |
| | |
| பூங்கொடி கடல்நகர் அடைதல் | |
| | |
| பூங்கொடி தன்பாற் போஒய்க் `கடல்நகர்த் தேங்கிருள் நீக்கும் கடப்பா டுடையேம் எழுகெனச் செப்ப, ஏந்திழை அவளொடும் | 40 |
| | |
--------------------------------------------------------------- |
| வியன் - அகன்ற, சூழும் - மேற்கொள்ளும், ஒருப்படேன் - உடன்படமாட்டேன், நயவா - விரும்பாத, போஒய் - சென்று, கடப்பாடு - கடமை, ஏந்திழை - பூங்கொடி. | |
| | |