| அழகிய அல்லி மலையுறை யடிகள் அருண்மொழி முதலோர் அன்புடன் விடைதரச் | |
| சுருளலை எழுப்பும் கருநிறக் கடலுள், பகைபிளந் தோடும் பான்மையன் போல மிகுபுனல் பிளந்து மிதந்து விரையும் மரக்கலம் ஏறி, மணிநீர்க் கடல்தன் புறத்தினில் சூழ்தரல் போன்று மடமை | 45 |
| அகத்தினில் சூழ்தர அல்லற் பாடுறும் கடல்நகர்த் துறைமுகம் கண்டனள்; ஆயிடை மடமை துடைக்கும் மனமுளோர் குழுமி | 50 |
| | |
| பூங்கொடிக்கு வரவேற்பு | |
| | |
| ஆழி அடங்க ஆர்ப்பொலி எழுப்பினர், வாழி எனுமொலி வான்முக டுற்றது, | |
| கதிரோற் கண்ட கடிமலர் போலப் புதியோர்க் காணலும் பொலிந்தன முகமெலாம், உள்ளம் உவகை ஊற்றெடுத் தனவே, கள்ளவிழ் மலராற் கட்டிய தெரியல் சூட்டி மகிழ்ந்தனர், தோரண வகைகள் | 55 |
| காட்டிய வீதிகள் கடக்க வழியெலாம் வண்ண மலர்கள் வாரி இறைத்தனர், கண்கள் இமைத்திலர் கண்டனர், இன்னியம் செவிவழிப் புகுந்து சிந்தையை நிறைக்கப் புவியிற் காணாப் புதுமை கண்டனர்; | 60 |
| | |
| பூங்கொடியின் சொன்மழை | |
| | |
| இவ்வணம் ஊர்வலம் எழுந்திடல் நோக்கி அவ்விய நெஞ்சினர் அஞ்சினர் அவரெலாம் | 65 |
--------------------------------------------------------------- |
| சூழ்தரல் - சூழுதல், ஆயிடை - அங்கு, ஆழி - கடல், முகடு - உச்சி, கடிமலர் - மணமிக்கதாமரை. கள் - தேன், தெரியல் - மாலை, இன்னியம் - இன்னிசை, அவ்விய - பொறாமையுற்ற. | |
| | |