சொற்போர் புரிக |
|
| பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில் கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல் | |
| சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; | 120 |
| நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல் அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச் சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ? திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை | |
| உரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; | 125 |
| | |
| ஞாலத்து இயற்கை | |
| | |
| நல்லன செய்வோர்க்கு நலிவே தருதல் மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்; உலகுக் குழைக்கும் உத்தமர் தம்மைச் சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும் | |
| கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் | 130 |
| நஞ்சுணச் செய்தும் நலிவுகள் தந்தும் நன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம் இன்றுநம் மிடையே இறுகப் பிணைந்தது; ஆதலின் இச்செயல் ஆற்றத் துணிந்தீர்! | |
| | |
| பூங்கொடி துணிபு | |
| | |
| சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் | 135 |
| கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில் அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல் என்னின மக்கள் எறிகல் பட்டுச் செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்க | |
| மாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்; | 140 |
--------------------------------------------------------------- |
| கழை - கரும்பு, நிறுவுக - நிலை நாட்டுக, சால்பு - தக்கது, நலிவு - துன்பம், மல்லல் - வளப்பம். | |
| | |