பக்கம் எண் :

கடல் நகர் புக்க காதைபக்கம் : 63

சிந்தனை செய்க

 
  ஆய்தற் றொழிலோர் அறிவினுக் கெட்டாக்
காலங் கடந்தநும் தாய்மொழி வாழ
ஞாலம் வாழ நவின்றனென் சிலவழி,
ஒவ்வும் வழியெனின் உவப்புடன் கொள்க
 
  செவ்விதன் றாயின் சிந்தித் தொகுக்குக' 145
  எனவாங்கு
உணர்வு பொங்க உரையாற் றியபின்
 
  மணமலர்ப் பந்தர் மருங்கிருந் தனளே. 150

---------------------------------------------------------------

  ஞாலம் - உலகம், செவ்விது - சிறந்தது, பந்தர் - பந்தல்.