பக்கம் எண் :

கடல் நகரில் தங்கிய காதைபக்கம் : 65

  ஆயே! என்றன் ஆருயிர்த் தோழி
யாண்டுளாள் நிகழ்ந்தது யாதென் றுரை'என
 
 

தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

 
  ஆண்டு நிகழ்ந்த அத்துணைச் செய்தியும்  
  மூண்டெழும் உணர்ச்சி முந்துற மொழிந்து'இனும் 25
  புகலுவென் கேட்டி! பூங்கொடி ஆற்றிய
தகவுரை கேட்டோர் அகமிக வுருகி
இன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும்
என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும்
 
  ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30
  காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்;
சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப்
பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ'
இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும்
 
 

அருண்மொழி மனநிலை

 
  அல்லி வருந்தி அருண்மொழி தன்பாற் 35
  புல்லி, அனைத்தும் புகன்றது கேட்டவள்
கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின்
விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்;
வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே!
 
  வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!' 40
  எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள்
மனமொழி செயலெலாம் மாசறத் திகழ்ந்தவள்;
 
 

பூங்கொடி கலக்கம்

 
  கல்ல்லென் பேரூர் கடல்நகர் ஆங்கண்
புல்லர் வீசிய கல்லின் விசையால்
 

---------------------------------------------------------------

  ஆயே - தாயே, நயந்தனர் - வேண்டினர், பேதுறல் - மயங்குதல், புல்லி - பொருந்தி, இறுமாந்து - செம்மாந்து, கல்ல்லென் - (ஒற்றளபெடை) `கல்' என்னும் ஒலியுடைய, விசை - வேகம்.