| நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் | 45 |
| சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள்; சிந்தனைத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள் வந்து மறைந்தன; தந்தையின் நினைவும் நொந்தஅவ் வுளத்தில் நுழைந்தது; ஐயகோ! | |
| மொழிக்குறும் பகைமை முதுகிடப் பொருதனை! | 50 |
| இழுக்குறும் அடிமை இரிந்திட உழைத்தனை! வழுக்களைந் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனை! ஆயினும் அந்தோ அறிவிலார் கூடி, நாயினும் கீழோர் நயவஞ் சகரால் | |
| கொன்றனர் நின்னைக் கொடுமை! கொடுமை! | 55 |
| என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத் துயரம் புனலாய்த் துணைவிழி வழியா உயிரொடு வெளிவரல் ஒப்ப வழிந்தது; | |
|
பூங்கொடி தெளிதல் |
|
| இத்துயர் கண்ட எழில்மதி முகிலுட் | |
| புக்கது; பின்னர்ப் புத்தொளி வீசிச் | 60 |
| சிரித்தது வானில்; சிந்தனை நெஞ்சினில் விரித்துள கவலை விரைந்து கலைந்திட அடுத்த தறிவொளி, விடுத்தனள் இடுக்கண்; உடுக்கணம் இதனை உற்று நோக்கின; | |
| முத்தக் கூத்தனை மூடிய கல்லறை | 65 |
| சித்தத் தெழுந்தது சிலிர்த்தனள் உடலம்; நினைதுயர் நீங்க நெஞ்சகம் சிரித்தனள்; முனைவொடு பணிசெய முயன்றனள் நங்கை; | |
|
பூங்கொடியின் புகழ்மணம் |
|
| நாடொறும் அறிவுரை நயந்துரைத் திருந்தனள் | |
--------------------------------------------------------------- |
| சேக்கை - படுக்கை, பொருதனை - போரிட்டாய், இரிந்திட - விலக, வழு - குற்றம், முகில் - மேகம். | |
| | |