| வீடுகள் தோறும் விருந்துக் கழைத்தனர், | 70 |
| கேட்போர் பலராய்க் கிளைத்தனர் பல்கினர், வேட்போர் தொகையும் மிகவாய்த் திரண்டன, ஒன்றே குலமெனும் உணர்வு விரிந்தது; நன்றே செய்தனள் நம்முயர் தலைவி | |
| என்றே தொழுதனர் இசைத்தனர் அவள்புகழ்; | 75 |
| உள்ளம் பொய்யா துழைப்பவர் எண்ணம் எள்ளள வும்பிழை ஏலா தீண்டெனும் | |
| கொள்கை நிலைத்திடச் செய்தனள் கொடியே. | 78 |
------------------------------------------------------------- |
| வேட்போர் - விரும்புவோர், கொடி - பூங்கொடி. | |
| | |