| எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன், | |
| எனினும் பின்னர் என்னுரை விழைவோர் | 25 |
| நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்' | |
|
நாவலர் ஆறுதல் உரை |
|
| எனுமுரை கேட்ட இலக்கிய நாவலர் `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்ப முன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே; | |
| தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் | 30 |
| எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்; வெற்றி வெற்றி விளைவது கண்டடோம்; உற்றநின் துயரால் உளமது கலங்கேல் ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; | |
|
நாவலர் தலைமேற் கல் |
|
| நேற்றோர் அவையில் நிகழ்த்தினென் பேச்சு, | 35 |
| பொல்லாங் குடையார் புழுங்கினர் நெஞ்சம் கல்லார் நல்வழி நில்லார் புல்லார், குழப்பம் விளைத்துக் கூட்டங் கலைத்தனர், விளங்கொளி அவித்தனர் வீணர், ஒருசிலர் | |
| பாறைக் கல்லொடு பக்கம் வந்தனர், | 40 |
| வீரச் செயலென விழைந்தனர், தலைமிசை ஓங்கினர், அவ்வுழி உற்றொரு தோழர் தாங்கினர் அதனைத் தடுத்து நிறுத்தினர், தடுத்திரார் ஆயின் தலைதூள் ஆகும், | |
| உடலும் உயிரும் உலகுக் காக்கினென், | 45 |
| இடரினைக் கண்டு தொடைநடுக் குறுதல் மடமை அன்றோ? மதியிலார்செயலது, | |
--------------------------------------------------------------- |
| முன்னுவோர் - நினைப்போர், எல்லையில் - அளவில்லாத. | |
| | |