| நாவலரின் முன்னை நிகழ்ச்சி | |
| | |
| யான்புரி அலுவலில் ஏன்விலக் குற்றேன்? மீன்புலி கயலால் மேம்படு தமிழக | |
| விடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி | 50 |
| கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன், இவையே யான்செய் தவறென இயம்பி, நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; | |
|
நாவலர் ஊக்கமூட்டல் |
|
| மதுப்பூங் குழலி! `மாநிலத் தித்துயர் | |
| பொதுப்பணி புரிவோர்க்குப் புதுவ தன்றே! | 55 |
| விதுப்புறேல் நின்பணி வீறுற் றோங்கும்' என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்; `நன்றுநன் றைய! நான்அய ரேன்இப் பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; | |
|
உலகியல் நிலைமை |
|
| உலக மாந்தர் நிலைதான் என்னே! | 60 |
| நிலையிலாக் கொள்கை, நேர்மை இன்மை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள் பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்; மறுநாள் மாறி `மதியே இல்லார், | |
| சிறியார்' எனப்பழி செப்புவர் அந்தோ! | 65 |
| | |
| தொண்டர்தம் பெருமை | |
| | |
| நல்லன செயலே நாளும் ஆற்றும் வல்லமை பூண்டு வழுவிலாக் குறள்நெறி பரப்பிக் கடவுட் பள்ளியில் பைந்தமிழ் சிறக்கப் பணிபுரி சீரியோர் மலையுறை | |
--------------------------------------------------------------- |
| கிளர்ந்தெழ - வளர, நவை - குற்றம், புதுவது - புதியது, நாணார் - நாணம் இலராய், விதுப்புறேல் - அஞ்சாதே. | |
| | |