| அடிகள் தம்மை, அறியார் கூடி | 70 |
| நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்; வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும் கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்; தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! | |
| என்ற மொழிப்பொருள் உணர்ந்தேன் ஐய! | 75 |
|
பூங்கொடியின் உறுதிமொழி |
|
| நின்றன் பெருமையும் நீணிலம் அறியும்; எத்துயர் வரினும் எடுத்த பணியே இலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோ இலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்; | |
| பேரா சிரியப் பெரியோய்! நின்போல் | 80 |
| யாரே செயல்செய வல்லார்? யானும் நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன், என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே' எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; | |
|
குறளுரை தெளிதல் |
|
| `மனமிக நல்லாய்! வாழிய பெரிதே! | 85 |
| உலகப் பெருநூல் ஓதி உணர்ந்தனை! கலகப் பொருளுடை கடிகதில் அம்ம! புத்துரை பலப்பல காணுதி! யானும் ஒத்த வகையால் உணர்ந்தநல் உரைசில | |
| கூறுவென் கேண்மோ' என்றுரை கூறத் | 90 |
| தேறினள் செல்வி தெளிபொருள் உணர்ந்தே | |
| வீறுகொள் செம்மல் விடைகொண் டனரே. | 92 |
--------------------------------------------------------------- |
| வேத்தியலாளர் - அரசியலார், கண்டின் - கற்கண்டின், நீணிலம் - பேருலகம், இலக்கு - குறிக்கோள், விருது - பட்டம், கடிகதில் - நீக்குக, செம்மல் - சிறந்தோர். | |
| | |