பக்கம் எண் :

பக்கம் :72

10. தொல்காப்பியம் உணர்ந்த காதை

குறளுரை பரப்புதல்

 

 

நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்
சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்கு
உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;
கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,
 
  இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5
     
 

தாமரைக்கண்ணி வருகை

 
     
  தாமரைக் கண்ணி தந்தனள் வருகை;
காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்
தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇ
நீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழி
 
  கூறா நின்றனள்; கூறிய நங்கையை 10
  ஆரத் தழுவி அப்பெரு மாட்டி
வீரத் திருமகள் வாழிய என்றனள்;
 
     
 

பூங்கொடி வினவல்

 
     
  `ஊரில் புதுமை உற்ற துண்டுகொல்?
அன்னையும் தோழியும் என்பிரி வாற்றி
 
  நன்னல மோடவர் துன்னினர் கொல்லோ? 15
  உரையாய் தாயே' என்னலும் `உன்னைத்  
     
 

தாமரைக்கண்ணி மறுமொழி
அருண்மொழி நிலைமை

 
     
  திரைவாய்க் கடல்நகர் திருத்துவான் வேண்டித்
தனியே விடுத்ததால் தையலர் இயல்பான்
நனிகலங் கினர்பின் நலிவு துடைத்துச்
 

---------------------------------------------------------------

  காமரு - அழகுமிக்க, கடிதின் - விரைவில், எழீஇ - எழுந்து, தழீஇ - தழுவி, துன்னினர் - அமைந்தனர், திரை - அலை, திருத்துவான் - திருத்த.