பக்கம் எண் :

பக்கம் :74பூங்கொடி

  மேனிலை எய்தலும் மிதிப்பர்அம் மாந்தரை; 45
  நானிலம் இவ்வணம் நடந்திடல் கண்டோம்;  
 

கோமகன் வஞ்சகப் பணி

 
  இளையோன் றானும் இவ்வழி செல்லும்
உளமே உடையோன், தன்னலம் ஒன்றே
குறியா வைத்துக் குழைந்து பொதுப்பணி
 
  புரிவோன் ஆயினன், பூங்கொடி நின்னை 50
  வஞ்சித் திருந்து வதுவை புரிதலை
நெஞ்சத் தழுத்தி நின்றனன் காணுதி!
தமிழ்ப்பணி எனின்நீ தலைபணி வாய்என
மனப்பால் குடித்து மகிழ்ந்தனன்' என்றனள்;
 
 

பூங்கொடி வருந்துதல்

 
  `ஐயகோ தமிழே! ஐயகோ தமிழே! 55
  செய்ய தொண்டுளம் சிலரே கொண்டனர்;
உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்
நின்னலம் சிறிதும் நினையார் உளரே'
என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி;
 
     
 

தாமரைக்கண்ணி அறிவுரை

 
     
  `இன்று பொதுப்பணி எளிதென எண்ணேல் 60
  உள்ளமும் உயிரும் உணர்வும் தமிழென
உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!
தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்
தமிழ்காப் போரென நினைப்பது தவறு;
 
     
 

இருவகைப் பகை

 
     
  பொதுப்பணி புரிவோய்! புந்தியில் ஒன்றுகொள் 65
  எதிர்ப்படு பகையை எளிதில் வெல்லலாம்;
சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து
சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம்
 

---------------------------------------------------------------

  நுகர்வார் - அனுபவிப்பார், உள்ளுவோன் - நினைப்போன்.