பக்கம் எண் :

ஏடுபெற்ற காதைபக்கம் : 81

  படம்விரி யரவுக்குப் பசுப்பால் வார்த்தோம்!
உடனுறை வாழ்வும் உவந்ததற் களித்தோம்!
 
 

மனத்துயரம்

 
  அச்சகத் தொழிலோன் அவன்மனை யாட்டி  
  மகப்பெறு நிலையில் மிகப்பெருந் துயரால் 100
  வருந்துதல் கேட்டு விரைந்தவன் தொழிலைத்
திருந்த முடித்து வரும்பொருள் பெற்று
வீடு செல்ல விழைந்தவன் எடுக்கக்
கூடும் எழுத்துக் குலைந்து சிதறி
 
  வீழ்ந்திடக் கண்டு வெதும்புதல் போல 105
  என்மனம் கலங்கி ஏடுகள் பார்த்தேன்;  
 

இருபெருஞ் சுவடிகள்

 
  கூத்தும் இசையும் கூறும் இருநூல்
ஏத்தும் படியாய் என்விழிப் பட்டன;
வாழ்த்துக் கூறி மகிழ்ந்தவை புரட்டினேன்;

 
  நெருப்பாற் புண்படு நெஞ்சம் வேதுபெற் 110
  றிருப்பது போல இன்பம் விளைந்தது;
இசையும் கூத்தும் தமிழில் இலைஎனும்
வசைமொழி கூறி வருவோர் மடமை
தொலைக்கஇவ் விருநூல் துணைசெயும் எனநான்
 
  விலைக்குப் பெற்றவ் வேடுகள் கொணர்ந்தேன்; 115
     
 

மூதாட்டி சுவடிகள் தருதல்

 
    
  நானிவை பிரித்துப் பயிலும் நாளில்
மீனவன் என்னும் மேலோன் கையன
இந்நற் சுவடிகள் என்ப துணர்ந்தேன்;
மின்னற் கொடியே! மிகுபயன் தருமிவ்
 
  வேடுகள் நின்பால் இருந்திடல் நலமாம்; 120
  கூடிய ஆண்டெனைக் கூடிய ததனால்
இவைநீ கைக்கொண் டியற்றுக நற்பணி;
 

---------------------------------------------------------------

  அரவு - பாம்பு, கையன - கையிலிருந்தன.